My OMR

Local Community News Portal

in an untowards Accident - Two young software Techies were Killed in a road accident.

The driver, an youngster drove the car overspeeding and was found drunk

OMR News, Sept 16, 2022

The death of young women who came to Chennai from abroad to look for work in a road accident has caused a great tragedy.

Lavanya from Andhra Pradesh and Srilakshmi from Kerala were working in a software company in Nawalur, Chennai. They were going to their accommodation after work yesterday. Around 11 pm, when they were trying to cross the road at OMR, a speeding car hit them both.

The driver of the accident vehicle was Motishkumar, a youth from Chennai. He was found to be under the influence of alcohol while driving. In connection with the accident, Motheesh Kumar has been arrested and the Pallikarana Traffic Investigation Police is investigating.

OMR-ல் கோர விபத்து. 2 மென்பொறியாளர்கள் பலி.

கோர விபத்து:

வெளிமாநிலத்திலிருந்து சென்னை வந்து தங்கி வேலைப்பார்த்த இளம்பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த லாவண்யா மற்றும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி இருவரும் சென்னை நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று வேலை முடிந்து அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில், அவர்கள் OMR இல் சாலையை கடக்க முயன்றபோது, ​​அதிக வேகத்தில் வந்த கார் அவர்கள் இருவர் மீதும் மோதியது.

விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சென்னையைச் சேர்ந்த மோதிஷ்குமார் என்ற இளைஞர். அவர் வாகனம் ஓட்டும் போது குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக, மோத்தீஷ்குமாரை கைது செய்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.